[X] Close

வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் எடைகுறைவதாக நுகர்வோர் புகார்


  • kamadenu
  • Posted: 20 Apr, 2019 09:18 am
  • அ+ அ-

வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் எடை குறைவாக உள்ளதாக நுகர்வோர் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நுகர்வோர்கள் கூறியதாவது: சென்னையில் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் சிலிண்டர்களில் அண்மைக்காலமாக எரிவாயு திருட்டு நடைபெறுகிறது. வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் சிலிண்டரின் எடை 14.2 கிலோ எடை இருக்க வேண்டும். பெரும்பாலான சிலிண்டர்கள் 3 கிலோ வரை எடை குறைவாக உள்ளன. டியூசிஎஸ் நிறுவனம், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் விநியோகிக்கும் சிலிண்டர்களிலும் இத்தகைய முறைகேடுகள் நடக்கின்றன. டீக்கடைகள் மற்றும் ஹோட்டல்களில் விதிகளுக்குப் புறம்பாக, வர்த்தக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்துவதற்குப் பதிலாக, வீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் எரிவாயு சிலிண்டர்களின் மேல் பொருத்தப்பட்டுள்ள வாஷர்களும் சரியாக பொருத்தப்படுவதில்லை. இதன் காரணமாகவும் எரிவாயு கசிந்து எடை குறைகிறது. அத்துடன், இது ஆபத்தாகவும் உள்ளது.

இதுகுறித்து, அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் சிலிண்டர்கள் எடை குறைவாக உள்ளதாக எங்களுக்கும் புகார்கள் வருகின்றன. அதனடிப்படையில், நாங்களும் அடிக்கடி சோதனை நடத்தி வருகிறோம். எடை குறைவான சிலிண்டர்களைக் கண்டுபிடித்தால், அதை விநியோகித்த ஏஜென்சிகள் மீது நடவடிக்கை எடுக்கிறோம் என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close