[X] Close

பொதுத்தேர்வு முடிவு விவரங்களை பள்ளிகள் விளம்பரம் செய்யக்கூடாது: பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை


  • kamadenu
  • Posted: 20 Apr, 2019 08:59 am
  • அ+ அ-

பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிகள் விளம்பரம் செய்யக்கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெற்றன. இதில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தொடர்ந்து ஏப்ரல் 29-ம் தேதி 10-ம் வகுப்புக்கும், மே 8-ம் தேதி 11-ம் வகுப்புக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.இந்நிலையில் பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிகள் விளம்பரம் செய்யக்கூடாது என்று அரசு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:ஆரோக்கியமற்ற போட்டி சூழல் மற்றும் மாணவர்களின் மன உளைச்சலை தவிர்க்கும் பொருட்டு, அனைத்து வகையான பள்ளிகளும் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் தரவரிசை பட்டியல் மற்றும் அதிக மார்க் எடுக்கும் மாணவர் பெயர், புகைப்பட விவரங்களை நாளிதழ், பதாகைகள் மற்றும் ஊடகங்களில் விளம்பரம் செய்யக்கூடாது. இதுதொடர்பாக எல்லா பள்ளி தலைமையாசிரியர்கள், நிர்வாகிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். மேலும், அரசு உத்தரவுப்படி செயல்படாத பள்ளிகள் மீது முதன்மை கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, அதன் விவரங்களையும் இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close