[X] Close

எனக்கு 7 ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய், உனக்கு?- ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிய பாப்பிரெட்டிபட்டி மண்டலம்


7-6

  • kamadenu
  • Posted: 19 Apr, 2019 16:19 pm
  • அ+ அ-

-ஸ்ரீவித்யா

" நான் 7 ஓட்டுபோட்டேன் 6 ஆயிரம் கொடுத்தாங்க, உனக்கு எவ்வளவு கொடுத்தாங்க" தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி மண்டலத்தில் உள்ள நாதமேடு வாக்குப்பதிவு மையத்தில் ஒரு இளைஞர் மற்றொரு இளைஞரிடம் கேட்கிறார். அதற்கு அந்த இளைஞர் " நான் 4 ஓட்டுபோட்டேன்" என்று பதில் அளித்தார்.

திருப்பூரில் இருந்து வாக்களிப்பதற்காக வந்திருந்த இரு பெண்கள், தங்களின் வாக்காளர் அடையாள அட்டையை மறந்துவிட்டனர். அவர்கள் இருவரும் தி இந்துவிடம்(ஆங்கிலம்) கூறுகையில், " வாக்குப்பதிவு மையத்துக்குள்ள எங்க ஊர்காரங்கள் போயிருக்காங்க, அவுங்க பார்த்து சொன்னவுடனே நாங்க ஓட்டுபோடுவோம்" என்று தெரிவித்தார். வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் வந்த இரு பெண்களும் 60/190 என்ற எண் கொண்ட வாக்குப்பதிவு மையத்துக்குள் சென்று கை விரலில் மைவைத்தவாறு வெளியே வந்தார்கள்.

வன்னியர் சமூகத்தின் ஆதிக்கம் மிகுந்த இந்த நாதமேடில் வன்னியர் தவிர மற்ற சமூகத்தினர் கூட தங்களின் வாக்குகளை சுதந்திரமாக செலுத்த முடியாத சூழல் நிலவுதாக கூறப்படுகிறது. பாமக-வைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், " நாதமேடு வன்னியர் சமூகத்தினர் இருக்கும் பகுதி, இங்கு வன்னியருக்கு மட்டுமே ஓட்டு, மற்றவர்களுக்கு ஓட்டு இல்லை. இது வன்னியர் பகுதி" என்று பெருமையாக குறிப்பிட்டார்.

கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது, தி இந்து (ஆங்கிலம்) இந்த கிராமம் குறித்து செய்தி வெளியிட்டு இருந்தது. அதில் இந்த கிராமத்தில் வசிக்கும் தாழ்த்ப்பட்ட மக்களின் வாக்குகளைக் கூட இங்குள்ள பாமக கட்சியினர் தாங்களே எந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று முடிவு செய்து அளித்துவிடுகின்றனர். தலித் மக்களும், தலித் அல்லாத மற்ற பிரிவினரும் தங்களின் வாக்குகளை சுதந்திரமாக செலுத்த முடியவில்லை என்று தெரிவித்திருந்தது.

பிறமாநிலத்தைச் சேர்ந்த ஒரு பாதுகாப்பு அலுவலர் தி இந்துவிடம் அப்போது கூறுகையில், " என் வாழ்வில் இதுபோன்ற வாக்களிக்கும் முறையை, தேர்தலை நான் பார்த்ததே இல்லை" எனத் தெரிவித்திருந்தார்.

பாப்பிரெட்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள்  பட்டியலில் நாதமேடும் வைக்கப்பட்டது. தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.  வாக்குப்பதிவுமையத்தில் ஒருவரே பலமுறை வாக்களித்தல், வாக்குப்பதிவு பகுதியை கைப்பற்றுதல், அடையாளஅட்டையின்றி வாக்களித்தல், பூத் சிலிப் மட்டும் கொண்டுவந்து வாக்களித்தல், தேர்தல் அதிகாரிகளுக்கு பகிரங்க மிரட்டல் போன்றவை இந்த மையத்தில் நடப்பதற்காக திட்டமிட்டே, 4 மையங்களில் உள்ள வாக்களிக்கும் இடத்துக்கு மட்டும் கண்காணிப்பு கேமிரா தவிர்க்கப்பட்டது

903 வாக்குகள் பதிவான 60/194 எண் கொண்ட வாக்குப்பதிவு மையத்தின் அதிகாரி கூறுகையில், " எனக்குகாலையில் இருந்து மிரட்டல் வந்து கொண்டே இருந்தது. வாக்களிக்க வந்தவர்கள் செல்போன்கள் கொண்டுவந்து வாக்குப்பதிவை பதிவு செய்தனர்" என்றார்.

வாக்குப்பதிவு மையத்தில் ஏன் செல்போனை அனுமதிக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டபோது, அந்த அதிகாரி கூறுகையில், " நான் என்ன செய்ய முடியும், காலையில் இருந்து எனக்கு மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. பள்ளி ஆசிரியரான எனக்கு இதுபுதிதாக இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே பாமக கட்சியைச் சேர்ந்த ஒருவர் போலீஸ்காரர் ஒருவரிடம் வாக்குவாதம் செய்வதை தி இந்து நிருபர் பார்க்க நேர்ந்தது. பாமக கட்சியைச் சேர்ந்த அவரிடம் செல்போனை வாக்குப்பதிவு மையத்துக்குள் கொண்டு செல்லக்கூடாது என்று  போலீஸார் உத்தரவிட்டார். ஆனால், அந்த நபரோ, " உன்னால் என்ன முடியும், இங்க பாருங்க நாங்க எவ்வளவுபேரு இருக்கோம்" என்று கேட்டுவிட்டு செல்போனுடன் உள்ளே செல்ல தயாராகினார்.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி பலமுறை இந்த வாக்குப்பதிவு மையத்துக்கு வந்து கண்காணிப்பில் ஈடுபட்டு சென்றார். ஆனால், குறைவான போலீஸார், அதிகாரிகள் இருந்ததால், இங்கு நடந்த பல்வேறு முறைகேடுகளை கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்த வாக்குப்பதிவு மையத்தில் இருந்த ஒரு அதிகாரி பகிர்ந்த வீடியோவில், ஒரு பெண் வாக்காளரை தொடர்ந்து சென்ற பூத்ஏஜென்ட், அந்த பெண்ணைக் கேட்காமலே வாக்கு எந்திரத்தின் பட்டனை அழுத்தும் காட்சி இருந்தது.  மற்றொரு வீடியோவில் முதியவருடன் செல்லும் ஒருநபர், அவரைக் கேட்காமலேயே வாக்கைப் பதிவு செய்த காட்சி இருந்தது.

மாவட்ட ஆட்சிய வந்துசென்றபின் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒருவர் ," ஏய் 100 சதவீதம் வாக்குப்பதிவு நமக்கு பாதுகாப்பு இல்லை. அதனால, 90 சதவீதம்தான் சரியா இருக்கும் " என்று பேசுவதை கேட்க முடிந்தது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close