[X] Close

இளைஞர்களின் பங்களிப்பால் ஜாதி, மதம் ரீதியாக வாக்களிப்பது குறைந்துள்ளது: ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கருத்து


  • kamadenu
  • Posted: 19 Apr, 2019 10:31 am
  • அ+ அ-

இளைஞர்களின் பங்களிப்பு காரணமாக, ஜாதி, மத ரீதியாக வாக்களிப்பது குறைந்துள்ளது என்று ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கூறினார்.

கோவை முட்டத்துவயல் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நேற்று வாக்களித்த ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வாக்களிக்கும் பொறுப் பைக்கூட நிறைவேற்றாதவர்கள், இந்த நாடு நம்முடையது என்ற உணர்வே இல்லாதவர்கள். ஏதேனும் தவறு நடந்தால், அதை குறைகூறிப் பேசுவோம். ஆனால், நம் கடமையைச் செய்ய மாட்டோம். இது தவறானது. சாதாரண மக்கள், தம்மை ஆள்பவரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு மகத்தானது. இதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும்.

நம் கையில்தான் நம் எதிர்கா லமும், தேச வளர்ச்சியும், அடுத்த தலைமுறையின் எதிர்காலமும் உள்ளது. இந்தப் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். அனைத்து துறைகளிலும் தொழில்நுட்பத்தில் முன்னேறும் சூழலில், வாக்குப்பதிவிலும் நவீன சாதனங்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை. தோல்வியடைந்தால் ஒரு விதமாகவும், வெற்றியடைந்தால் வேறு விதமாகவும் பேசும் பேச்சுகளை நிராகரிக்க வேண்டும்.மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை வெளியில் இருந்து யாரும் தவறான முறையில் பயன்படுத்த முடியாது.

எனவே, வாக்குப்பதிவு இயந்திரத்தை குறைகூறுவது போன்ற விமர்சனங்கள், தேசத்தின் தேர்தல் நிகழ்வை குறைத்து மதிப்பிடச்செய்யும். எனவே, இதுபோன்ற விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும். இளைஞர் களின் பங்களிப்பால் ஜாதி, மத ரீதியாக வாக்களிப்பது குறைந் துள்ளது. தேர்தல் ஆணையத்தின் பணி மிகவும் மகத்தானது. நமது தேர்தல் ஆணையம், உலகின் மிகப் பெரிய தேர்தலை சிறப்பான முறையில் நடத்தி வருகிறது. தவிர்க்க முடியாத சில தவறுகள் இருப்பினும், 90 கோடி மக்கள் ஈடுபடும் தேர்தலை மகத்தான முறையில் நிகழ்த்துவது பாராட்டுக்குரியது. இதனால், உலகமே நம்மை வியப்புடன் பார்க்கிறது என்றார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close