[X] Close

விசிக சின்னம் பானையை உடைத்ததால் தகராறு: ஜெயங்கொண்டம் அருகே 10 வீடுகள் சேதம், 8 பேர் காயம் - போலீஸ், அதிரடிப்படை குவிப்பு


10-8

  • kamadenu
  • Posted: 19 Apr, 2019 09:55 am
  • அ+ அ-

ஜெயங்கொண்டம் அருகே வாக்குப் பதிவின்போது ஏற்பட்ட தகராறு காரணமாக 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. 8 பேர் காயமடைந்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பொன்பரப்பி கிராமத்தில் நேற்று காலை வாக்குப் பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அப்போது, வாக்குப் பதிவு மையத்தின் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் சின்னமான பானையைத் தூக்கிவந்த ஒரு பிரிவினர் ரோட்டில் போட்டு உடைத்தனர்.

இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டதில் ஒருவர் காயமடைந்தார். இதனால் பானையை உடைத்த நபர்கள்,ஒரு தெருவுக்குள் புகுந்து 10-க்கும் மேற்பட்ட வீடுகளின் ஓடுகளை அடித்து சேதப்படுத்தினர். ஒரு வீட்டில் எரிந்துகொண் டிருந்த விறகை எடுத்து இருசக்கரவாகனத்தின் மீது வீசிவிட்டுச் சென்றனர். இதில், அந்த வாகனம் சேதமடைந்தது.

இத்தாக்குதலில் லேசான காய மடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தேவா(19), அஜய்(19), செல்வராஜ்(40), ரவி(48) ஆகிய 4 பேரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க் கப்பட்டனர். மற்றொரு தரப்பில் காயமடைந்த சுப்பிரமணியன்(45), வெற்றி(33), ராஜா(35), சசி(28)ஆகிய 4 பேரில் சுப்பிரமணி யன் அரியலூர் அரசு மருத்துவ மனையிலும், மற்ற 3 பேரும் பொன் பரப்பி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

தாக்குதலின்போது, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவரின் கண்ணில் காயம் ஏற் பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக செந்துறை போலீஸார் விசாரித்து வருகின்றனர். அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் மற்றும் அதிவிரைவுப் படையினர்குவிக்கப்பட்டு, அப்பகுதி போலீஸாரின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close