[X] Close

குமரி அருகே 2 கள்ள ஓட்டுகள் பதிவு


2

  • kamadenu
  • Posted: 19 Apr, 2019 09:48 am
  • அ+ அ-

குமரி மாவட்டம் திருவட்டாறு அடுத்துள்ள பிலாங்காலை வாக்குச் சாவடியில் 2 கள்ள ஓட்டுகள் பதிவானது தேர்தல் அலுவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்குட்பட்ட பிலாங்காலையில் புனித ஜோசப் தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 157-வது வாக்குச்சாவடியில் நேற்று பகல் 12 மணிக்கு மேல் வாக்களிப்பதற்காக அஜின், ஷாஜிராஜேஷ் ஆகியோர் சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் இருவரின் வாக்குகளையும் ஏற்கெனவே யாரோ பதிவு செய்துவிட்டு சென்றுள்ளனர். இதனால் அவர்கள் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

இதுபற்றி அறிந்ததும் அங்கு பணியிலிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘‘வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள வாக்காளர்களின் படங்கள் பழையதாக இருந்ததால் எளிதில் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து முகவர்களும் எதிர்ப்பு தெரிவிக்காததால் கள்ள ஓட்டு விழுந்ததை கண்டுபிடிக்க முடியவில்லை’’ என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து 2 இளைஞர்களிடமும் வாக்குச்சீட்டை கொடுத்து வாக்குகளை பதிவு செய்து அலுவலர்கள் பெற்றுக்கொண்டனர். 2 கள்ள ஓட்டுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் முடிவு செய்வார் என தெரிகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close