[X] Close

பாஜக, அமமுக மோதலில் 5 பேர் காயம்


5

  • kamadenu
  • Posted: 19 Apr, 2019 09:47 am
  • அ+ அ-

கன்னியாகுமரி மாவட்டம் அருமநல்லூரில் பாஜகவினர், அமமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. கத்தியால் குத்தப்பட்டதில் பாஜவினர் 5 பேர் பலத்த காயமடைந்தனர்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி அருமநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அப்போது அவ்வூரைச் சேர்ந்த அமமுகவினருக்கும், வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்த பாஜக தொண்டர்களுக்கும் இடையே பள்ளி வளாகத்தில் வைத்து கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர்.

நேற்று மாலை 6 மணியளவில் அருமநல்லூர் வாக்குச்சாவடி அருகே பாஜகவைச் சேர்ந்த 5 பேர் நின்று கொண்டிருந்தனர். திடீரென அமமுகவைச் சேர்ந்த 15 பேர் கொண்ட கும்பல் அப்பகுதிக்கு வந்தது. இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. கத்தி, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் பாஜகவினர் தாக்கப்பட்டனர்.

இதில், பாஜகவை சேர்ந்த மணிகண்டன் (21), சதீஷ்குமார் (28), பழனியப்பன் (34), பரமேஸ்வரன் (25), சரவணன் (20) ஆகிய 5 பேர் பலத்த காயமடைந்தனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் இவர்களை மீட்டு பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close