[X] Close

அரசுக்கு எதிராக வாக்களிக்க வலியுறுத்தல்: ஸ்டாலின், தயாநிதி மாறன் மீது தேர்தல் அதிகாரியிடம் புகார்


  • kamadenu
  • Posted: 19 Apr, 2019 09:31 am
  • அ+ அ-

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக வாக்களிக்க வலியுறுத்தியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தயாநிதி மாறன் ஆகியோர் மீது அதிமுக சார்பில் தமிழக தலைமை தேர்தல்அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம், அதிமுக செய்தி தொடர்பாளர் ஆர்.எம்.பாபு முருகவேல் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வாக்களித்துவிட்டு வெளியில் வந்து, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வாக்காளர்களின் மனநிலையை மாற்றும்விதமாக, “அரசை மாற்றுவதற்காக வாக்களிக்க வேண்டும். குறிப்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இது, அவர்களின் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. இது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் செயலாகும்.

விதிகளை மீறும் செயல்

அதேபோல், மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், காலை 10 மணிக்கு நந்தனத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்தார். அவர் பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, அரசை மாற்றுவதற்காக வாக்களிக்க வேண்டும் என்றார். இது அவருக்கு சாதகமாக வாக்களிக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் வலியுறுத்துவது போல் உள்ளது. இதுவும், தேர்தல் நடத்தை விதிகளை மீறும் செயலாகும். எனவே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close