[X] Close

அடையாறு வாக்குச்சாவடியில் கால் விரலால் வாக்களித்த மாற்றுத்திறனாளி


  • kamadenu
  • Posted: 19 Apr, 2019 09:20 am
  • அ+ அ-

அடையாறு வாக்குச்சாவடியில் மாற்றுத்திறனாளி ஒருவர் கால் விரலால் வாக்களித்தார்.

சென்னை அடையாறு ஆந்திர மகிளா சபா உள்ள துர்காபாய் தேஸ்முக் பொது மருத்துவமனை காப்பக விடுதியில் இருப்பவர் நரசிம்மலு (44). ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். நரம்பு பிரச்சினையால் ஏற்பட்ட பாதிப்பின் காரணத்தால், இவரது கைகள் மற்றும் கால்கள் செயல்படவில்லை.

வீல் சேரை பயன்படுத்தி வருகிறார். கால்கள் மட்டும் சிறிதளவு அசைக்க முடியும் என்பதால் கால்களின் விரலால் கம்ப்யூட்டரை இயக்குவது, ஓவியம் வரைவது, எம்ராய்டரிங் செய்வது போன்ற பணிகளைச் செய்து வருகிறார்.

இடது கை விரலில்...

வாக்களிப்பதற்காக பசுமைவழிச் சாலையில் உள்ள வாக்குச்சாவடிக்கு இவரை ஆட்டோவில் ஊழியர்கள் அழைத்துச் சென்றனர். வாக்குச்சாவடியில் இருந்த அதிகாரி, இவரது இடதுகை விரலில் மை வைத்தார். மின்னணு இயந்திரம் இருக்கும் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட இவர், தனது காலின் பெருவிரலால் பட்டனை அழுத்திவாக்களித்தார். வாக்களித்து விட்டு வந்த நரசிம்மலு, “வாக்களித்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது. அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்” என்றார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'சிந்துபாத்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close