[X] Close

இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை நினைவுகூரும் புனித வெள்ளி இன்று அனுசரிப்பு: தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை


  • kamadenu
  • Posted: 19 Apr, 2019 09:14 am
  • அ+ அ-

இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிக்கப்படுகிறது. கிறிஸ்தவர்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர்பண்டிகை வரும் 21-ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்.14) குருத்து ஞாயிறாக அனுசரிக்கப்பட்டது. இந்த ஒரு வார காலத்தை கிறிஸ்தவர்கள் புனித வாரமாகக் கடைபிடிக்கிறார்கள். புனித வாரத்தில் பெரிய வியாழன் முக்கிய நாள் ஆகும். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் (பெரிய வியாழன்) தனது 12 சீடர்களுடன் கடைசி இரவு உணவருந்திய பின்னர் 12 சீடர்களின் பாதங்களையும் தண்ணீரால் கழுவிசுத்தப்படுத்தியதாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியை நினைவுகூரும் வகையில் பெரிய வியாழக்கிழமையான நேற்று இரவு கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆலயங்களில் நடைபெறும் சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனையின்போது, ஆயர்கள் மற்றும் பங்கு தந்தையர்கள் இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களைக் குறிக்கும் வகையில் 12 பேர்களின் பாதங்களைத் தண்ணீரால் கழுவி சுத்தப்படுத்தினர். சென்னை சாந்தோம் பேராலயத்தில் நேற்று இரவு நடைபெற்ற சிறப்பு ஆராதனையில் சென்னை மயிலை உயர்மறைமாவட்ட ஆர்ச் பிஷப் ஜார்ஜ் அந்தோணிசாமி இறைமக்கள் 12 பேரின் பாதங்களைத் தண்ணீரால் கழுவி சுத்தப்படுத்தினார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. புனித வாரத்தின் முக்கிய நிகழ்வான புனித வெள்ளி (பெரியவெள்ளி) இன்று அனுசரிக்கப்படு கிறது. இதில், இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவை மரணத்தையும் நினைவுகூரும் வகையில் சிலுவைப் பாதையும் சிறப்பு ஆராதனையும் ஆலயங்களில் நடைபெறும். சிலுவைப் பாதையின்போது 14 நிலைகளில் இயேசு கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூருவர்.

ஈஸ்டர் பண்டிகை

இயேசு கிறிஸ்து இறந்தமூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்ததாக பைபிளில் குறிப்பிடப்பட் டுள்ளது. அந்த வகையில் உயிர்ப்பு பெருவிழாவான ஈஸ்டர் பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close