[X] Close

புதுச்சேரியில் 81.57% பதிவு


81-57

  • kamadenu
  • Posted: 19 Apr, 2019 08:33 am
  • அ+ அ-

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் ஆளும் காங் கிரஸ் சார்பில் முன்னாள் சபாநாயகர் வைத்திலிங்கம், பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் என்.ஆர்.காங் கிரஸ் சார்பில் டாக்டர் நாரா யணசாமி உட்பட 18 பேர் போட்டியிட்டனர்.

இத்தொகுதியில் மொத்தம் 9 லட்சத்து 73 ஆயிரத்து 161 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 7 லட்சத்து 93 ஆயி ரத்து 833 வாக்குகள் பதிவா யின. பதிவான வாக்குகளில் 3 லட்சத்து 75 ஆயிரத்து 227 பேர் ஆண்கள். 4 லட்சத்து 18 ஆயிரத்து 535 பேர் பெண்கள் ஆவர். 71 பேர் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள். மொத்தம் 81.57 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

வருமானத்துக்கு அதிக மாக சொத்து சேர்த்த வழக் கில் அசோக் ஆனந்தின் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்ட தால், புதுச்சேரி மக்களவைத் தொகுதியோடு தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைக்கும் நேற்று இடைத்தேர்தல் நடந்தது.

இதில் திமுக வேட்பாளர் வெங்கடேசன், என்.ஆர்.காங் கிரஸ் வேட்பாளர் நெடுஞ் செழியன் உட்பட 8 பேர் போட்டி யிட்டனர். இத்தொகுதியில் மொத்தம் உள்ள 29 ஆயிரத்து 757 வாக்காளர்களில், 23 ஆயி ரத்து 109 பேர் வாக்களித்துள் ளனர். இதில் 10 ஆயிரத்து 955 பேர் ஆண் வாக்காளர்கள். 12 ஆயிரத்து 153 பேர் பெண் வாக்காளர்கள். ஒரே ஒருவர் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந் தவர். தட்டாஞ்சாவடியில் 77.66 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close