[X] Close

சிம்பு வாக்களிக்க வராதது ஏன்? - டி.ராஜேந்தர் விளக்கம்


  • kamadenu
  • Posted: 18 Apr, 2019 15:46 pm
  • அ+ அ-

சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில், நடிகரும் லட்சிய திமுக தலைவருமான டி.ராஜேந்தர் வாக்களித்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேர்தல் இந்த மாதம் முடிந்து எதற்காக அடுத்த மாதம் முடிவுகள் வருகின்றன. இத்தனை கட்டங்களாக தேர்தல் பிரித்து நடத்தப்படுகிறது. வாக்குகளை எண்ண ஏன் தாமதம்? வாக்குச் சீட்டிலேயே எண்ணி விடலாமே. மின்னணு வாக்குப்பதிவு மற்றும் எண்ணிக்கை சுலபமானது என்கிறார்களே. அடுத்த மாதம் எண்ணிக்கை என்றால், நாங்கள் நம்ப மாட்டோம்", என்று தெரிவித்தார்.

நடிகர் சிம்பு ஏன் வாக்களிக்க வரவில்லை என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டி.ராஜேந்தர், "சிம்பு சென்னையில் இருந்திருந்தால் உரிமையை நிலைநாட்ட நிச்சயம் வந்திருப்பார். அவர் முக்கியமான பணி காரணமாக லண்டனில் உள்ளார். 15, 16 ஆகிய தேதிகளில் டிக்கெட் பதிவு செய்ய முயற்சித்தும் கிடைக்கவில்லை. வாக்காளிக்க முடியாததால் சிம்பு வருத்தப்பட்டார். என்ன வாக்களிக்கச் சொன்னார். நான் லட்சிய திமுக தலைவர். நான் வாக்களிக்காமல் இருக்க முடியுமா? லட்சியத்துடன் வாக்களித்து விட்டேன்" என டி.ராஜேந்தர் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close