[X] Close

பெண்ணுக்கு முதல்வர் பணம் தந்தது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்


  • kamadenu
  • Posted: 18 Apr, 2019 08:46 am
  • அ+ அ-

சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கேஆர்எஸ் சரவணனை ஆதரித்து, முதல்வர் பழனிசாமி நேற்று முன்தினம் காலை பட்டைக்கோயிலில் இருந்து பஜார் வீதி வரை நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, வாழைப்பழம் விற்பனை செய்த பெண்ணிடம் முதல்வர் வாக்கு சேகரித்தார். அந்த பெண் ஒரு சீப்பு வாழைப்பழத்தை முதல்வருக்கு அளித்தார். பழத்தை பெற்றுக் கொண்ட முதல்வர் ரூ.100 கொடுத்தார். முதல்வர் விளக்கம்இந்நிலையில் முதல்வர் பணம் கொடுக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து முதல்வர் பழனிசாமி அளித்த விளக்கத்தில், ‘‘ஒவ்வொரு கடையாக நடந்து சென்று ஓட்டு கேட்டேன்.

பழக்கடைக்கு சென்றதும் பழம் நல்லா இருக்கு, விலை என்ன என்று கேட்டு, ஒரு சீப் பழம் வாங்கினேன். அதற்கான பணத்தை கொடுத்தேன். ஆனால், பழம் வாங்கியதை காட்டாமல், பணம் கொடுத்ததை எடிட் செய்து காட்டுகிறார்கள். என்னைப் பொருத்தவரை எந்தபொருள் வாங்கினாலும், அதற்கான பணத்தை கொடுத்து வாங்குவேன். வேண்டுமென்றே திரித்து, அவதூறு கிளப்புவதை கண்டிக்கிறேன்’’ என்றார்.

இதுகுறித்து சேலம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ரோஹிணி கூறியதாவது:சேலத்தில் முதல்வர் பெண்ணுக்கு பணம் கொடுத்ததாக எவ்வித புகாரும் வரவில்லை. இருப்பினும், ஊடகங்களில் வந்துள்ள செய்தி அடிப்படையில், தேர்தல் ஆணையத்துக்கு இதுசம்பந்தமாக தகவல் அனுப்பிஉள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close