[X] Close

மெல்லிசை மன்னர் எம்எஸ்வி குறித்த இசை கலந்துரையாடல் நிகழ்ச்சி: சென்னையில் 21-ம் தேதி நடைபெறுகிறது


21

  • kamadenu
  • Posted: 18 Apr, 2019 08:24 am
  • அ+ அ-

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் குறித்த இசை கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் 21-ம் தேதி நடைபெறுகிறது.

மெல்லிசை மன்னர் ரசிகர்கள் சங்கம் சார்பில் எம்.எஸ்.விஸ்வநாதன் குறித்த இசை கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை ஆழ்வார்பேட்டை, கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில், 21-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. அதில் பிரபல சங்கீத வித்வானும், எம்.எஸ்.விஸ்வநாதனுடன் பல திரைப்படங்களில் பணிபுரிந்தவருமான மதுரை ஜி.எஸ்.மணி பங்கேற்று, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த பாடல்களை பாடி, விளக்கவுரை வழங்க உள்ளார்.

மேலும் கவிஞர் காமகோடியன் பங்கேற்று, எம்.எஸ்.விஸ்வநாதனுடன் பழகிய அனுபவங்கள் குறித்து கலந்துரையாட உள்ளார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர், mmfatrust@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும், 9600953535, 9962276580 ஆகிய எண்களுக்கு வாட்ஸ்ஆப் அல்லது குறுஞ்செய்தி அனுப்பியும் முன்பதிவு செய்துக்கொள்ளலாம்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close