[X] Close

எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் தினமும் 500 பேருக்கு இலவச மதிய உணவு


500

  • kamadenu
  • Posted: 18 Apr, 2019 08:22 am
  • அ+ அ-

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தினமும் 500 பேருக்கு இலவசமாக மதிய உணவு வழங்கப்படுகிறது.

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவ மனையில் 700-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்நோயாளிகளாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சத்தான உணவு

மருத்துவமனை நிர்வாகம் சார்பில் குழந்தைகளுக்கு காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சத்தான உணவு வழங்கப்படுகிறது. குழந்தைகளுடன் தங்கி இருப்பவர்கள் பணம் கொடுத்து உணவுகளை வாங்கி உட்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அட்சய பாத்திரம் அறக்கட்டளை சார்பில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குழந்தைகளுடன் இருக்கும் பெற்றோர் அல்லது உடனிருக்கும் 500 பேருக்கு இலவசமாக மதிய உணவு வழங்கி வருகிறது.

அம்மா உணவகம்

இதுதொடர்பாக மருத்துவமனை இயக்குநர் டாக்டர் அரசர் சீராளரிடம் கேட்டபோது, “தமிழகம் முழுவதும் இருந்து ஏழை குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். குழந்தைகளுக்கு மருத்துவமனையில் இருந்து உணவு வழங்கப்படுகிறது. ஆனால், உடன் இருப்பவர்கள் மருத்துவமனையில் இருக்கும் அம்மா உணவகம் மற்றும் வெளியில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டு வருகின்றனர். சென்னையைச் சேர்ந்தவர்கள் வீட்டில் இருந்து உணவு சமைத்து கொண்டு வருகின்றனர். அட்சயபாத்திரம் அறக்கட்டளை தினமும் 500 பேருக்கு இலவசமாக மதிய உணவு வழங்குவதால் வெளி ஊர்களில் இருந்து வந்திருப்பவர்கள் பயனடைகின்றனர்” என்றார்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close