[X] Close

திருநீர்மலை கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்


  • kamadenu
  • Posted: 18 Apr, 2019 08:16 am
  • அ+ அ-

பல்லாவரம் அடுத்த திருநீர்மலையில் உள்ள ஸ்ரீரங்கநாத பெருமாள் கோயில் சித்திரை மாத பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது.

பல்லாவரம் அடுத்த திருநீர்மலையில் ஸ்ரீரங்கநாத பெருமாள் கோயில் உள்ளது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்தக் கோயில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார்களால் பாடல்பெற்ற இக் கோயிலில் சித்திரை, பங்குனி என ஆண்டுக்கு 2 முறை பிரம்மோற்சவ விழா மற்றும் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது. தொடர்ந்து 23-ம் தேதி கருட சேவையும், 26-ம் தேதி தேரோட்ட உற்சவமும் நடைபெற உள்ளது. தினமும் காலை - மாலையில் சுவாமி வீதி உலாவும் நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர், கோயில் செயல் அலுவலர் பெ.சக்தி, தக்கார் அன்னக்கொடி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close