[X] Close

வணிகர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேண்டுகோள்


100

  • kamadenu
  • Posted: 18 Apr, 2019 08:14 am
  • அ+ அ-

வணிகர்களின் உரிமையை நிலைநாட்ட, வணிகர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் பொதுச் செயலர் வீ.கோவிந்தராஜூலு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:வணிக பெருமக்களுக்கான இக்கட்டான காலச்சூழலில், இந்த தேர்தல் நடைபெறுகிறது. சரியான முடிவை, சரியான தருணத்தில், சரியான வாக்களிப்பின் மூலமே நமது கோரிக்கைகளையும், வணிக சமுதாயத்துக்கான வளர்ச்சி திட்டங்களையும் நிறைவேற்றிட முடியும். எனவே வணிக சமுதாய மக்கள், வணிக வளர்ச்சிக்கான சிந்தனை நோக்கில், தமிழகம் முழுவதும் உள்ள வணிகர்கள் ஒன்றிணைந்து, நமது உரிமையை நிலைநாட்டிட, வணிகர்களின் ஒருமித்த சக்தியை எடுத்துக்காட்டும் விதமாக, நாவினால் பேசுவதை விட வாக்கினால் பேசி,நல்லதொரு முடிவை 100 சதவீதம் வாக்களிப்பதன் மூலம் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close