[X] Close

சாத்தூரில் ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம் விநியோகம் பணப்பட்டுவாடா செய்த அதிமுக நிர்வாகி மீது வழக்கு


2

  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 12:15 pm
  • அ+ அ-

சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளர்களிடம் ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கியதாக அதிமுக கிளைச் செயலாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ராஜவர்மன், திமுக சார்பில் கோசுக்குண்டு சீனிவாசன், அமமுக சார்பில் எதிர்கோட்டை சுப்பிரமணியன் உட்பட 31 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்போடு அதிமுக தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. வேட்பாளர் ராஜவர்மன், அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கமானவர். இதனால், இத்தொகுதியில் அமைச்சர் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்.

அதேபோல், திமுக வேட்பாளர் கோசுக்குண்டு சீனிவாசனும், அமமுக வேட்பாளர் எதிர்கோட்டை சுப்பிரமணியனும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வெம்பக்கோட்டை அருகே கொருக்கம்பட்டியில் வாக்காளர்களிடம் ஓட்டுக்கு ரூ.2 ஆயிரத்தை அதிமுகவினர் வழங்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, கொருக்கம்பட்டி வி.ஏ.ஓ சோபனாதேவி, கீழராஜகுலராமன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, கொருக்கம்பட்டியில் அதிமுக கிளைச் செயலாளர் சின்னவீரன் (48) என்பவர் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் முரசு சின்னத்திலும், சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் இரட்டை இலை சின்னத்திலும் ஓட்டளிப்பதற்காக வாக்காளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் பணம் கொடுத்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சின்னவீரனிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close