[X] Close

8 வழிச் சாலைத் திட்டத்தை நிறைவேற்றச் சொன்னவர் ஸ்டாலின்: ஈபிஎஸ் தாக்கு


8

  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 11:56 am
  • அ+ அ-

8 வழிச் சாலை குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டதாகவும் ஸ்டாலின் அப்போது எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் காங்கயம் நகர மன்றச் செயலாளர் வெங்கு மணிமாறன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், ''சென்னையில் இருந்து சேலம் வரை 8 வழிச்சாலை அமைப்பது முழுக்க முழுக்க மத்திய அரசின் திட்டம். இது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் பராமரிக்கப்படுகிற சாலை. ராணுவத் தளவாடங்களின் உதிரி பாகங்கள் அமைப்பதற்காக கோயம்புத்தூர், சேலம், ஓசூர் ஆகிய பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கு மிகப்பெரிய சாலைகள் வேண்டும். அதற்காகத்தான் மத்திய அரசு இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தது. நிலம் கையகப்படுத்துவது மட்டுமே தமிழக அரசின் பங்கு.

அந்தத் திட்டத்தைக் கொண்டு வருகிறபோது ஸ்டாலின் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். 8 வழிச் சாலை குறித்து அவர் கேள்வி எழுப்பும்போது நான் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும் முதல்வராகவும் பதில் சொன்னேன். எல்லா விவரங்களையும் எடுத்துக் கூறிவிட்டு, இந்தத் திட்டம் வேண்டுமா, இல்லையா என்றுகேட்டு ஆதரிக்கிறீர்களா எதிர்க்கிறீர்களா என்றும் கேள்வி எழுப்பினேன்.

''நான் எதிர்க்கவில்லை, விவசாயிகளை அழைத்துப் பேசுங்கள், அந்தத் திட்டத்தை நிறைவேற்றுங்கள்'' என்றார். ஜூன் 11, 2018-ல் சட்டப்பேரவையில் ஸ்டாலின் தெரிவித்த கருத்து இது.

எட்டு வழிச் சாலையை இப்போது எதிர்க்கும் அதே ஸ்டாலின் தான், அன்று அப்படிக் கூறினார். இப்பொழுது மாற்றிப் பேசுகிறார். மத்திய அரசு மிகப்பெரிய திட்டத்தைக் கொண்டு வந்தது. ஆனால் இன்று நீதிமன்றம் அதற்குத் தடை கொடுத்திருக்கிறது. எங்களைப் பொருத்தவரை நீதிமன்றத்தை மதிக்கிறோம். நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழக அரசு செயல்படும்'' என்றார் எடப்பாடி பழனிசாமி.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close