[X] Close

விட்டு விடுதலையாகிக் கொண்டாடுங்கள்


  • Posted: 31 Oct, 2013 15:27 pm
  • அ+ அ-

-இரா.தினேஷ்குமார்

பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை, பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், ஹொய்சாளர்கள், சம்புவராயர்கள், விஜயநகரப் பேரரசு ஆட்சிப்பகுதியாக விளங்கியது.  திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில், கீழ்பென்னாத்தூர், செங்கம், கலசப்பாக்கம், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதிகள் அடங்கும்.

பொருளாதாரத்தின் திசை: விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் மாவட்டம். தென்பெண்ணையாறு, செய்யாறு ஆகிய ஆறுகள் இருந்தும் தண்ணீர் இல்லை. தண்டராம்பட்டு அருகே தனியார் சர்க்கரை ஆலை மட்டும் உள்ளது. கூலி வேலைக்காக ஆந்திரா மற்றும் பெங்களூரு செல்லும் தொழிலாளர்களின்  எண்ணிக்கை மிக அதிகம். திருவண்ணாமலை அருகே ஆவூர் என்ற பகுதியில் ‘கோரைப் பாய்’ உற்பத்தியைக் கைத்தொழிலாகவும் மற்றும் பரம்பரைத் தொழிலாகவும் இஸ்லாமியர்கள் செய்து வருகின்றனர்.

தீர்மானிக்கும் பிரச்சினைகள்: சென்னை - சேலம் இடையே எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். விளைநிலத்தையும், கிராமத்தையும் இரண்டாகப் பிரிக்கும் இத்திட்டம் தேவையில்லை என்று கிராம மக்கள் எதிர்க்கின்றனர். கடந்த மக்களவைத் தேர்தலில் கவுத்தி மலையில் இரும்பு தாது எடுக்கும் திட்டத்தை அருகே உள்ள கிராம மக்கள் எதிர்த்தனர். இப்போது, எட்டு வழிச் சாலைத் திட்டத்தின் மூலமாக இரும்பு தாது வெட்டி எடுக்கும் திட்டமும் உயிர்பெற்றுள்ளது. வறட்சி மற்றும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிதி உதவி கிடைக்கவில்லை என்ற கோரிக்கை உள்ளது.

நீண்ட காலக் கோரிக்கைகள்: தென்பெண்ணையாறு - செய்யாறு நதிகளை இணைக்க வேண்டும். திருவண்ணாமலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். செங்கம், கலசப்பாக்கம் தொகுதியில் மலர்ச் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் வாசனை திரவியத் தொழிற்சாலையும், மணிலா சாகுபடியை ஆதரிக்கும் வகையில் எண்ணெய் வித்து தொழிற்சாலையும் தொடங்க வேண்டும். மேல் செங்கத்தில் 11 ஆயிரம் ஏக்கரில் முடங்கிக் கிடக்கும் மத்திய அரசின் வேளாண் விதைப் பண்ணையை மீண்டும் செயல்படுத்த வேண்டும். திருவண்ணாமலை - சென்னை இடையே நேரடி ரயில் சேவை, திண்டிவனம் - திருவண்ணாமலை - ஜோலார்பேட்டை புதிய ரயில் பாதை, திருப்பத்தூரில் அரசு ஐடிஐ, சாத்தனூர் அணையைத் தூர்வாருதல், திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் தொழிற்பேட்டை, திருப்பதியைப் போல் அண்ணாமலையார் கோயில் மாட வீதியை மேம்படுத்துதல் ஆகியவை மக்களின் நீண்ட காலக் கோரிக்கைகள்.

ஒரு சுவாரஸ்யம்: திமுக முதன்முறையாகப் போட்டியிட்ட 1957 மக்களவைத் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியிலிருந்து வெற்றிபெற்ற இரா.தர்மலிங்கம்தான் திமுகவின் முதல் மக்களவை உறுப்பினர். அவரே, 1962-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் வெற்றிபெற்றார். ஆனால், அதன் பிறகு நடந்த தொகுதி மறுசீரமைப்பில் திருவண்ணாமலை தொகுதி திருப்பத்தூர் தொகுதியாக மாறியது. 42 ஆண்டுகளுக்கு பிறகு 2008-ம் ஆண்டு நடந்த தொகுதி சீரமைப்பில்தான் திருவண்ணாமலை தொகுதி மீண்டும் உதயமானது.

வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகங்கள்: வன்னியர், முதலியார், ஆதிதிராவிடர் ஆகியோர் பெரும்பான்மையாக உள்ளனர். யாதவர்கள் மற்றும் சிறுபான்மையினர் கணிசமாக உள்ளனர். வெற்றியைத் தீர்மானிப்பதில் வன்னியர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

அதிக வெற்றியை ருசித்தவர்கள்: திருப்பத்தூர் மக்களவைத் தொகுதியில் 1971 முதல் 2004 வரை நடந்த 10 தேர்தல்களில் திமுக 7 முறையும், காங்கிரஸ் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இதில், திமுகவைச் சேர்ந்த த.வேணுகோபால் தொடர்ந்து 4 முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

களம் காணும் வேட்பாளர்கள்

திமுக அண்ணாதுரை

அதிமுக அக்ரி கிருஷ்ணமூர்த்தி

மக்கள் நீதி மய்யம் அருள்

அமமுக ஞானசேகர்

வாக்காளர்கள்

மொத்தம் 14,54,657

ஆண்கள் 7,20,557

பெண்கள் 7,34,031

மூன்றாம் பாலினத்தவர்கள் 69

புள்ளிவிவரங்கள் கடைசியாக மாவட்டவாரியாக எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே தரப்பட்டுள்ளன.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close