[X] Close

சாதி வெறியை தூண்டாதீர்கள்- ராமதாஸுக்கு முத்தரசன் அறிவுரை


  • kamadenu
  • Posted: 15 Apr, 2019 08:43 am
  • அ+ அ-

சிதம்பரம் மக்களவைத் தொகுதியின் திமுக கூட்டணி வேட்பாளரான விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று முன்தினம் இரவு சிதம்பரம் மேலவீதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: இந்திய சுதந்திரத்துக்கு பாடுபட்ட காந்தியை சுட்டுக் கொன்றவர்கள் யார் என்பது மக்களுக்குத் தெரியும். காந்திக்கு பிரதமர் அஞ்சலி செலுத்துகிறார்.

ஆனால் உத்தரப்பிரதேசத்தில் அவரது சீடர்கள் காந்தியை அவமதிக்கின்றனர். அதிமுக வெற்றி பெற்றால் நீட் தேர்வில் இருந்து விலக்கு என்று கூறியுள்ளனர். ஆனால் பாஜக மத்திய அமைச்சர் நீட் தேர்வில்விலக்கு அளிக்க முடியாது என்று கூறுகின்றார். இபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸும் மக்களை ஏமாற்றுகின்றனர். தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றப்பட்டும் நீட் தேர்வுக்கு விதிவிலக்கு அளிக்கப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாநிலங்கள் விரும்பாதவரை நீட் தேர்வை திணிக்க மாட்டோம்என்று அறிவித்துள்ளனர். தமிழகத்தில் முதல்வராக இருப்பவர் ஏலத்தில் எடுக்கப்பட்டவர். தமிழர்களின் எந்த பிரச்சினை பற்றியும் இபிஎஸ்ஸுக்கு கவலையில்லை.

தேர்தல் பறக்கும் படையினர் எதிர்க்கட்சியினரிடம் மட்டுமே சோதனை செய்கின்றனர். ஏன் ஆளும் கட்சியினரிடம் பறக்கும் படை செல்லவில்லை. அங்கு செல்லும்போது றெக்கை இல்லையா?திமுக கூட்டணிக் கட்சியினர் எந்த சந்தர்ப்பத்திலும் எந்த இடத்திலும் சாதி வெறியைத் தூண்டிப் பேசவில்லை. திருமாவளவனை களங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து பேசி வருகிறார். ராமதாஸ் அரசியல் ரீதியாக பேசினால் பதில் சொல்கிறோம்.

உங்கள் கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. திருமாவளவனை வாக்கு சேகரிக்க வரவிடக்கூடாது என்று சிலரை தூண்டிவிட்டு நாகரீகமற்ற அரசியல் செய்கின்றீர்கள். இது நல்ல அரசியல் அல்ல. இது தொடருமானால், அதைச் சந்திக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். நீங்கள் நேர்மையான அரசியல்வாதி என்றால் சாதி வெறியை தூண்டாதீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close