[X] Close

வடசென்னையில் விஜயகாந்த் நாளை பிரச்சாரம்


  • kamadenu
  • Posted: 14 Apr, 2019 07:57 am
  • அ+ அ-

தேமுதிக தலைவர் விஜயகாந்த், வடசென்னை மக்களவை தொகுதி யில் நாளை பிரச்சாரம் செய்ய உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை தேமுதிகவினர் செய்துள்ளனர்.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டிவரும் நிலை யில், அனைத்து கட்சி தலைவர் களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள் ளனர். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர், வடசென்னை ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

தேமுதிக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா முதல்கட்ட பிரச்சாரத்தை முடித்துள்ளார். தேர்தல் தேதி நெருங்கும் நிலையில், அடுத்த கட்டமாக தேமுதிக போட்டியிடும் 4 தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

இதற்கிடையில், அமெரிக்கா வில் சிகிச்சை பெற்று கடந்த பிப்ரவரியில் சென்னை திரும்பிய கட்சித் தலைவர் விஜயகாந்த், ஓய்வில் உள்ளார். கூட்டணி தொடர்பான முக்கிய நிகழ்வுகளில் மட்டும் அவர் பங்கேற்றார். கட்சி அலுவலகத்துக்கு சென்று, கட்சி நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார்.

உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் பிரச்சாரத்தில் ஈடுபட வில்லை. மருத்துவர்களிடம் ஆலோ சித்து வருவதாகவும், விரைவில் அவர் பிரச்சாரம் செய்வார் என்றும் பிரேமலதா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வடசென்னை மக்களவை தொகுதி தேமுதிக வேட்பா ளர் அழகாபுரம் மோகன்ராஜை ஆதரித்து 15-ம் தேதி (நாளை) ஒரு நாள் மட்டும் விஜயகாந்த் பிரச்சாரம் செய்ய வாய்ப்பு உள்ளதாக தேமுதிக மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை தேமுதிக வினர் முழு வீச்சில் செய்து வருகின் றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close