[X] Close

தென் மாவட்டங்களில் ஏப். 17-ல் கனமழைக்கு வாய்ப்பு


17

  • kamadenu
  • Posted: 14 Apr, 2019 07:46 am
  • அ+ அ-

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

‘‘தமிழகம் முழுவதும் வெயில்தாக்கம் பரவலாக உயர்ந்து வருகிறது. மாநிலத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 105 டிகிரி வெப்பநிலை பதிவானது. இதுதவிர சேலம், கரூர், மதுரையில் தலா 104, தருமபுரி, வேலூர், திருநெல்வேலி, திருச்சியில் தலா 104, நாமக்கல்லில் 102 மற்றும் கோவையில் 101 டிகிரி வெப்பம் பதிவானது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும்.

கடல் காற்று தாமதமாக நிலத்தை நோக்கி வீசுவதால் வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலுார், திருப்பூர், மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய மத்திய மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி வரை உயர்ந்திருக்கும். இந்நிலையில் காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஏப்ரல் 17-ம் தேதி பரவலாக மழை பெய்யும். கடலோரம் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close