[X] Close

நதிகளை இணைப்பது இயற்கைக்கு எதிரானது: சென்னையில் நீரியல் நிபுணர் ராஜேந்திர சிங் கருத்து


  • kamadenu
  • Posted: 14 Apr, 2019 07:39 am
  • அ+ அ-

நதிகள் இணைப்பு இயற்கை நியதிக்கு எதிரானது என்று இந்தியாவின் நீர் மேலாண்மை நிபுணர் ராஜேந்திர சிங் கருத்து தெரிவித்தார்.

தேசிய தண்ணீர் குழுமம் மற்றும் தமிழக ஆறுகள் வளமீட்பு இயக்கம் சார்பில் மக்களுக்கான தேர்தல் அறிக்கை வெளியீடு சென்னையில் நேற்று நடைபெற்றது. ‘இந்தியாவின் தண்ணீர் மனிதர்’ என்று அழைக்கப்படும் நீர் மேலாண்மை நிபுணர் ராஜேந்திர சிங், தேசிய தண்ணீர் குழும செயலாளர் போலிசெட்டி சத்ய நாராயணா, தமிழ்நாடு ஆறுகள் வள மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டி.குருசாமி, சமூக ஆர்வலர் தீபா சேஷாத்திரி ஆகியோர் இத்தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

மிகப்பெரிய குற்றம்

பின்னர் ராஜேந்திர சிங் கூறியதாவது: நதிகள் இணைப்பு சாத்தியமாகக்கூடாது. நதிகளை இணைப் பது இயற்கை நியதிக்கு எதிரானதாகும். சூழலியல், சுற்றுச்சூழலுக்கு பேராபத்தாக முடியும். நதிகளை இணைக்க முயற்சிப்பது மிகப்பெரிய குற்றம். மனித உடல்களில் வெவ்வேறு ரத்த வகைகள் இருப்பதுபோல, ஒவ்வொரு நதிக்கும் ஒவ்வொரு தன்மை இருக்கிறது. அதனால் அந்த நதிகளை இணைப்பதற்குப் பதிலாக அவற்றை உயிர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தண்ணீர் பஞ்சம் ஏற்படாது.

தமிழகத்தில் நதிகளை உயிர்ப்பிப்போம் என்று கூறிக் கொண்டு, நதிகளை அழகுபடுத்துவதில்தான் கவனம் செலுத்துகிறார்கள். நதிகளை உயிர்ப்பித்தால்தான் பலன் கிடைக்கும். அதைச் செய்யாத கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது. காலத்தின் கட்டாயம்புதியவர்களுக்கு வாக்களியுங்கள். அல்லது நோட்டாவுக்கு வாக்களியுங்கள். நீர் ஆதாரங்களை தூர்வாரி, பேணிப்பாதுகாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை தேர்தல் மூலம் அரசியல்வாதிகளுக்கு மக்கள் புரியவைக்க வேண்டும். இவ்வாறு ராஜேந்திர சிங் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close