[X] Close

தமிழகத்தின் மத்திய மாவட்டங்களில் வெயில் அதிகரிக்கும்


  • kamadenu
  • Posted: 13 Apr, 2019 08:01 am
  • அ+ அ-

சென்னை வானிலை ஆய்வுமைய அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் வெயில் தாக்கம் பரவலாக உயர்ந்து வருகிறது. மாநிலத்தில் அதிகபட்சமாக கரூரில் 106.1 டிகிரி வெப்பநிலை பதிவானது.

இதுதவிர சேலத்தில் 106, வேலூர், திருச்சியில் தலா 105, தருமபுரி, திருத்தணி, மதுரையில் தலா 104, கோவையில் 103, நாமக்கல், திருநெல்வேலியில் தலா 102 மற்றும் ராமநாதபுரத்தில் 100 டிகிரி வெப்பம் பதிவானது. வங்கக்கடலோர பகுதிகளில் நிலவும் காற்று மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்கள் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடல் காற்று நிலத்தை நோக்கி வர மிகுந்த காலதாமதம் ஏற்படுகிறது.

இதனால் வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி,பெரம்பலுார், திருப்பூர், மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய மத்திய மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி வரை உயரும். மே மாதம் பரவலாக கோடை மழை பெய்ய வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close