[X] Close

சென்னையில் 17-ம் தேதி இறைச்சி விற்க தடை


17

  • kamadenu
  • Posted: 13 Apr, 2019 07:53 am
  • அ+ அ-

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, 17-ம் தேதி இறைச்சி விற்க மாநகராட்சி தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஏப்ரல் 17-ம் தேதி மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அன்று மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக் கூடங்கள் அனைத்தும் மூடப்படுகின்றன.

இதேபோன்று ஆடு, மாடு, இதர இறைச்சி விற்கவும், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.

அரசின் உத்தரவை செயல்படுத்த வியாபாரிகள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close