[X] Close

சிவகங்கை வாக்காளர்களைக் கவர்ந்த சினேகனின் நூதனப் பிரச்சாரம்


  • kamadenu
  • Posted: 12 Apr, 2019 15:58 pm
  • அ+ அ-

வாக்காளர்களைக் கவரும் வகையில் சிவகங்கையில் மநீம வேட்பாளர் சினேகன் நூதனப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் அனல் பறக்கப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளர் எச்.ராஜா போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் களம் காண்கிறார். இதனால் சிவகங்கை விஐபி தொகுதியாகவே மாறிவிட்டது.

இந்நிலையில் அந்த மக்களவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கவிஞர் சினேகன் போட்டியிடுகிறார். நூதன முறையில் அவர் மேற்கொண்ட பிரச்சாரம் வாக்காளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

தேர்தலுக்காக அழைப்பிதழை அச்சிட்டார் சினேகன். மத்தளம், நாதஸ்வரம் என வாத்தியங்கள் முழங்க, வெற்றிலைப் பாக்கு வைத்து வாக்காளர்களுக்கு அரசியல் மாற்றத்துக்கான அழைப்பிதழ் என்று அச்சடிக்கப்பட்ட பத்திரிகைகளை வழங்கினார். இது வாக்காளர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close