[X] Close

அரக்கோணம் மார்க்கத்தில் 50-க்கும் மேற்பட்ட விரைவு, மின்சார ரயில்கள் ரத்து


50

  • kamadenu
  • Posted: 12 Apr, 2019 07:53 am
  • அ+ அ-

இதுகுறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை - திருப்பதி சப்தகிரி(16057), திருப்பதி - சென்னை சப்தகிரி(16054), சென்னை - சப்தகிரி(16053), திருப்பதி - சென்னை (16058), சென்னை - திருப்பதி கரூடா (16203), திருப்பதி - சென்னை கரூடா (16204), சென்னை - கோயம்புத்தூர் சதாப்தி (12243), கோயம்புத்தூர் - சென்னை சதாப்தி (12244), சென்னை - கேஎஸ்ஆர் பெங்களூரு (22625), கேஎஸ்ஆர் பெங்களூரு - சென்னை (22626), கேஎஸ்ஆர் பெங்களூரு - சென்னை சதாப்தி (12028), சென்னை - பெங்களூரு சதாப்தி (12027), ஜோலார்பேட்டை - சென்னை ஏலகிரி (16090), சென்னை - ஜோலார்பேட்டை ஏலகிரி (16089) ஆகிய விரைவு ரயில்கள் வரும் 14-ம் தேதியிலும், ஜோலார்பேட்டை - அரக்கோணம் (16086), அரக்கோணம் - ஜோலார்பேட்டை (16085) ஆகிய விரைவுரயில்கள் வரும் 13, 14-ம் தேதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை - அரக்கோணம், அரக்கோணம் - சென்னை, காட்பாடி - அரக்கோணம், அரக்கோணம் - கடப்பா, கடப்பா - அரக்கோணம், வேலூர் - அரக்கோணம், அரக்கோணம் - செங்கல்பட்டு உட்பட 14 பயணிகள் ரயில்களின் சேவை வரும் 13, 14-ம் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வேலூர் - சென்னை கடற்கரை காலை 7.15, சென்னை கடற்கரை - வேலூர் மாலை 6, சென்னை - திருப்பதி காலை 9.50, திருப்பதி- சென்னை மாலை 3.05, சென்னை -அரக்கோணம் காலை 7.20, அரக்கோணம் - திருப்பதி காலை 9.15, திருப்பதி - நெல்லூர் காலை 11.30, நெல்லூர் - சூலூர்பேட்டை மாலை 4 உட்பட 22 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகின்றன. மேலும் மதுரை - மும்பை வாராந்திர ரயில் (11044) உட்பட சில ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close