[X] Close

வாக்குச்சாவடிகளில் சிசிடிவி பொருத்தும் பணி: பள்ளிகளை 24 மணி நேரமும் திறந்துவைக்க உத்தரவு


24

  • kamadenu
  • Posted: 12 Apr, 2019 07:05 am
  • அ+ அ-

வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் ஏப்ரல் 17-ம் தேதி வரை அனைத்து பள்ளிகளையும் 24 மணி நேரமும் திறந்து வைத்திருக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது. இதனுடன் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இதற்கிடையே தேர்தல் வாக்குச்சாவடிகள் பெரும்பாலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் ஏப்ரல் 17-ம் தேதி வரை அனைத்து பள்ளிகளையும் 24 மணி நேரமும் திறந்து வைத்திருக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘‘வாக்குப்பதிவு நாளில் முழுமையான கண்காணிப்பு பணியை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அதன்படி வாக்குச்சாவடிகளில் கண்காணிப்புகேமரா பொருத்தும் பணி இப்போது நடைபெற்று வருகிறது. இதற்கு ஏதுவாக ஏப்ரல் 17-ம் தேதி வரை வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஒரு பொறுப்பாளரை நியமித்து விடுமுறை நாட்கள் உள்ளிட்ட அனைத்து தினங்களிலும் 24 மணி நேரமும் பள்ளிகளை திறந்து வைத்திருக்க வேண்டும். இதுகுறித்த அறிவுறுத்தலை அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியருக்கு தெரியப்படுத்தி முதன்மை கல்வி அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close