[X] Close

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஓட்டுக்கு பணம் கொடுக்கும் பழக்கம் அதிகரிப்பு: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வேதனை


10

  • kamadenu
  • Posted: 12 Apr, 2019 07:03 am
  • அ+ அ-

ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் பழக்கம் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அதிகரித்து வருவதாக முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வேதனையுடன் கூறினார்.

‘பிரஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா’ அமைப்பு சார்பில் ‘2019 மக்களவைத் தேர்தல்: எதிர்நோக்கியுள்ள சவால்களும், ஊடகங்களின் பங்கும்’ என்ற தலைப்பில் சென்னை தரமணியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு கூறியதாவது:

இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை டி.என்.சேஷனுக்கு முன்பு, சேஷனுக்குப் பின்பு என பார்க்க வேண்டியுள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பொறுப்புக்கு டி.என்.சேஷன் வருவதற்கு முன்பு, தேர்தல் ஆணையம் மத்திய அரசின் ஓர் அங்கமாகவே பார்க்கப்பட்டது. ஆனால், அவர் தேர்தல் ஆணையர் ஆன பின்னர்தான், தேர்தல் ஆணையம் என்பது தன்னாட்சி அந்தஸ்து பெற்ற அதிகாரம் மிக்க ஓர் அமைப்பு என்பது தெரிய ஆரம்பித்தது. ஊடகங்களின் பொறுப்புஇந்திய மக்கள் தொகையில் கிட்டதட்ட 70 சதவீதம் பேர் வாக்காளர்களாக உள்ளனர். தேர்தல் நடைமுறையில் ஊடகங்களுக்குப் பெரும் பங்கு இருக்கிறது. ஆனால், தேர்தல் நேரத்தின்போது ஊடகங்களில் பணம் கொடுத்துசெய்தி வெளியிடும் போக்குகாணப்படுவது வருத்தம் அளிக்கிறது.

இந்த தவறான போக்குக்கு ஊடக நிறுவனங்களோ அல்லது அங்கு பணியாற்றுபவர்களோ காரணமாக இருக்கிறார்கள். இதற்காக அவர்கள் வருத்தப்பட வேண்டும். எப்படி, தேர்தல் ஆணையத்துக்கு பொறுப்பு இருக்கிறதோ அதுபோன்ற பொறுப்பு ஊடகங்களுக்கும் உண்டு என்பதை அவர்கள் உணர வேண்டும். தற்போதைய சூழலில், தேர்தல் நடத்துவது என்பது தேர்தல் ஆணையத்துக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் போக்கு தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு காலமாக அதிகரித்து வருகிறது. ஓட்டுக்குப் பணம் கொடுப்பதை ஒழிக்க முடியாவிட்டால், லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிக்க முடியாது. தவறு செய்யும் வேட்பாளர் யாராக இருந்தாலும் அவர்களைத் தற்காலிகமாக தகுதிநீக்கம் செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாபேசும்போது, ‘‘தேர்தல் ஆணையத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டதன் காரணமாக, பணப்பட்டுவாடா செய்வது முடிந்தவரையில் தடுக்கப்படுகிறது. குற்றம் சாட்டுவது வாடிக்கைதமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவில் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாகத் குற்றம் சொல்வதை, தேர்தலில் தோற்கின்ற கட்சிகள் வாடிக்கையாகக் கொண்டுள்ளன’’ என்றார். மூத்த பத்திரிகையாளர் எஸ்.முராரி பேசும்போது, ‘‘கடந்த 40 ஆண்டுகளாக வாக்காளர்களுக்கு இலவசங்கள் கொடுத்து அவர்களை அரசியல் கட்சித் தலைவர்கள் கறைபடுத்திவிட்டனர்’’ என்று குறிப்பிட்டார். இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை பத்திரிகையாளர் டி.ராமகிருஷ்ணன் நெறிப்படுத்தினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close