[X] Close

11 நகரங்களில் 100 டிகிரி வெயில் பதிவு


11-100

  • kamadenu
  • Posted: 12 Apr, 2019 06:45 am
  • அ+ அ-

தமிழகத்தில் 11 நகரங்களில் நேற்று 100 டிகிரி அளவை விட அதிக வெப்ப நிலை பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் ஓரிரு பகுதி களில் மழை பெய்தாலும், பல இடங்களில் வெப்பநிலை அதிகமாகவே உள்ளது. நேற்று மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெப்பநிலை அளவின்படி, அதிகபட்சமாக வேலூரில் 106 டிகிரி, கரூர் பரமத்தியில் 105 டிகிரி, திருச்சி, திருத்தணி, மதுரை தெற்கு, மதுரை விமான நிலையம், ஆகிய இடங்களில் தலா 104 டிகிரி, சேலம், நாமக்கல்லில் தலா 103 டிகிரி, பாளையங்கோட்டை, தருமபுரியில் தலா 102 டிகிரி, கோவையில் 101 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. அடுத்த சில தினங்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வழக்கத்தை விட 7 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது.

தெற்கு கர்நாடகத்தின் உள் பகுதி முதல் குமரிக் கடல் வரை காற்று சுழற்சி மற்றும் காற்று பிளவு நிலவி வருவதால், நெல்லை மாவட்டம் தென்காசியில் 8 செமீ, செங்கோட்டையில் 3 செமீ, ஆயக்கூடியில் 1 செமீ மழை பதிவாகியுள்ளது. அடுத்த சில தினங்களுக்கும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close