[X] Close

தமிழகத்தில் நல்ல அரசு நடப்பதற்கான எந்த சாயமும் இல்லை: ஆரணியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் கமல்ஹாசன் குற்றச்சாட்டு


  • kamadenu
  • Posted: 11 Apr, 2019 11:43 am
  • அ+ அ-

தேர்தல் பிரச்சாரத்துக்காக நான் சென்று வரும் இடமெல்லாம் நல்ல அரசு நடப்பதற்கான எந்த சாயமும் இல்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

ஆரணி மக்களவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஷாதியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று மாலை இரும்பேட்டில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசும்போது, ‘‘தேர்தல் பிரச்சாரத்துக்காக நான் சென்று வரும் இடமெல்லாம் நல்ல அரசு நடப்பதற்கான எந்த சாயமும் இல்லை. அண்டை மாநிலங்களைப் பார்த்து வருகிறேன். அந்த மாதிரியாவது இருக்கக்கூடாதா? என்று யோசிக்கிறேன். ஆனால், இங்குள் ளவர்களுக்கு அரசில் நாட்டம் இல்லை. அவர்களுக்கு எண்ணம் இல்லை. அவர்களின் குற்றங்களை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. உடை, மொழி என்ற அடிமைத்தனத்தை நமக்குள்ளும் புகுத்தப் பார்க்கிறார்கள், அது புகாது.

அதை மாற்றும் நேரம் வந்துவிட்டது. இங்கு பட்டுப் பூங்கா அமைக்க வேண்டும், நகரி வரை ரயில் விட ஏற்பாடு செய்வதாக கூறினர். ஆனால், செய்யவில்லை. எங்கள் கனவு உறுதிமொழி எல்லாம் கல்வி, உலகத் தரத்தில் இருக்க வேண்டும். இது என்னுடைய ஆசை. காலம் வரும்போது கனியும். இப்போது திருடி எடுக்கும் பணத்தை மிச்சப்படுத்தினால் இரண்டு தமிழ்நாட்டை செழிப்பாக்க முடியும். அதைத்தான் அவர்கள் இரண்டு, இரண்டு என்று காண்பிக்கின்றனர். அவர்கள் சாப்பிட்டு எடுத்துப் போடும் இலை அது.

எந்த அரசும் மக்களிடம் இருந்து எடுப்பதை பங்குபோடும்போது தாய் போல் இருக்க வேண்டும். ஆனால், அப்படியா அரசு இருக்கிறது. அவர்கள் இலவசமாக கொடுப்பதை நீங்கள் தடுக்க வேண்டாம் என்றார்கள். அவர்கள் தன் பையில் இருந்து எடுத்துக்கொடுத்தால் தாராளம், வள்ளல் எனலாம். இங்கு இருப்பதை அங்கு எடுத்துக் கொடுப்பது இல்லை அது. இல்லாமை இல்லாமையாக செய்ய வேண்டும் என்பதுதான் ஒரு அரசின் தோற்றமாக இருக்க வேண்டும். இது பயணத்தின் ஆரம்பம். அமைதியான ஒரு போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அப்படி நடந்தால் புதிய சரித்திரம் தொடங்குகிறது என்று அர்த்தம்’’ என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close