[X] Close

இன்று முதல் மே 19-ம் தேதி வரை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியிட தடை


19

  • kamadenu
  • Posted: 11 Apr, 2019 08:28 am
  • அ+ அ-

இன்று முதல் மே 19-ம் தேதி வரை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழகத்தில் மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ம் தேதி நடக்கிறது. 38 மக்களவைத் தொகுதிகளில் அன்று காலை 7 முதல் மாலை 6 மணி வரையும், மதுரை தொகுதியில் மட்டும் காலை 7 முதல் இரவு 8 மணி வரையும் வாக்குப்பதிவு நடக்கும். பொதுத்தேர்தல், இடைத்தேர்தல்களின்போது வாக்குப்பதிவுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக்கணிப்புகளின் முடிவுகளை வெளியிடுவது, பரப்புவதற்கு வரைமுறைகள் உள்ளன.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ், இன்று (ஏப். 11) காலை 7 மணி முதல் கடைசிகட்ட வாக்குப்பதிவு நடக்கும் மே 19-ம் தேதி மாலை 6.30 மணி வரை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை நடத்துவது, அதை அச்சு ஊடகம், மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது, வேறு ஏதேனும் முறையில் பரப்புவது தேர்தல் ஆணையத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவு முடிவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்துடன் முடிவடையும் 48 மணி நேர கால அளவில் ஏதேனும் கருத்துக்கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உட்பட எந்த ஒரு தேர்தல் விவகாரங்களையும் எந்தவித மின்னணு ஊடகத்தில் காட்சிப்படுத்துவதும் தடை செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close