[X] Close

அதிமுகவுக்கும் தினகரனுக்கும் தொடர்பு இல்லை: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திட்டவட்டம்


  • kamadenu
  • Posted: 11 Apr, 2019 08:19 am
  • அ+ அ-

அதிமுகவுக்கும் தினகரனுக்கும் இனி தொடர்பு கிடையாது என்பது உறுதி என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

விருதுநகரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: அதிமுகவுக்கும் தினகரனுக்கும் இனி தொடர்பு கிடையாது. ஆர்.கே. நகர் தேர்தலில் நாங்கள் அனைவரும் பணியாற்றினோம். மீண்டும் அனைவரும் இணைவோம் என்ற நிலைப்பாட்டில் இருந்தோம். இதனால் தினகரனுக்கு வெற்றி வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இப்போது அந்த சூழ்நிலை இல்லை. அங்கிருக்கும் தொண்டர்களை அதிமுக ஏற்றுக்கொள்ளும், குண்டர்களை ஏற்றுக்கொள்ளாது.

8 வழிச்சாலை மக்களுக்கு வேண்டாம் என்றால் எங்களுக்கும் வேண்டாம். இதுகுறித்து அனைத்துக் கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி அனைவரும் ஏற்கும் முடிவை எடுப்பார். பணம் பட்டுவாடா செய்வதற்கு அதிமுகவில் பணம் கிடையாது. நிர்வாகிகள் அனைவரும் சொந்த பணத்தைத்தான் செலவு செய்து வருகிறோம். திமுகவும், தினகரன் அணியிரும்தான் பணம் கொடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். பணப் பட்டுவாடாவைத் தடுக்க தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் புகார் கொடுத்து வருகிறோம்.

இவ்வாறு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close