[X] Close

13 மாவட்டங்களில் 7 டிகிரி வரை வெப்பம் உயர வாய்ப்பு: 10 மாவட்டங்களில் வெயில் சதம்


13-7-10

  • kamadenu
  • Posted: 11 Apr, 2019 08:13 am
  • அ+ அ-

தமிழகத்தில் சேலம், கரூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று 7 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் கோடை தொடங்குவதால், வெப்பம் மேலும் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட 3 டிகிரி முதல் 7 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது.

நேற்று மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெப்பநிலை அளவின்படி, அதிகபட்சமாக கரூர் பரமத்தி, சேலம் ஆகிய இடங்களில் தலா 105 டிகிரி, திருத்தணி, தருமபுரியில் தலா 104 டிகிரி, மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய இடங்களில் தலா 103 டிகிரி, கோவை, பாளையங்கோட்டையில் தலா 102 டிகிரி, நாமக்கல்லில் 101 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

புதன்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, அதிகபட்சமாகநெல்லை மாவட்டம் ஆய்க்குடி, தென்காசி ஆகிய இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close