[X] Close

அதிமுகவில் இருந்து திமுகவுக்கு செல்ல முயன்ற முன்னாள் எம்எல்ஏ வீட்டில் வருமானவரி சோதனை


  • kamadenu
  • Posted: 10 Apr, 2019 08:47 am
  • அ+ அ-

கடலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

கடந்த 2006 முதல் 2011-ம்ஆண்டு வரை கடலூர் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஐயப்பன். இவர் கடந்த 2012-ம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார். பின்னர் அக்கட்சியின் மாவட்ட அவைத் தலைவரானார். சமீபகாலமாக அவருக்கும் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சினை இருந்து வந்தது. இருவரும் இருகோஷ்டிகளாக செயல்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் ஐயப்பன் அதிமுகவில் இருந்து விலகி, வரும் 11-ம் தேதி வடலூரில் நடக்க இருக்கும் திமுக பிரச்சாரக் கூட்டத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் சேரப் போவதாக கடந்த இரண்டு நாட்களாக பேசப்படுகிறது. பறக்கும் படையினர் முகாம்இந்நிலையில் நேற்று திடீரென கடலூர் தவுலத் நகரில் உள்ள ஐயப்பன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். தேர்தல் பறக்கும் படையினர் அவரது வீட்டுக்கு முன்பு முகாமிட்டிருந்தனர். சுமார் 3 மணி நேரம்நடந்த சோதனையில் பணம், ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை. இது போல சேர்மன் சுந்தரம் நகரில் உள்ள ஐயப்பன் ஆதரவாளர் பிரகாஷ் வீட்டிலும் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அரசியல் காழ்புணர்ச்சி

இந்த வருமான வரித்துறை சோதனை குறித்து ஐயப்பனிடம் கேட்டதற்கு, “மாவட்ட அமைச்சர் சம்பத்தின் செயல்பாடு பிடிக்காமல் நான் கட்சியை விட்டு விலக முடிவு செய்து மாவட்ட அவைத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அதிமுக தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். மாற்றுக்கட்சியில் சேருவது குறித்து எனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தேன். இதனை பொறுக்காத சிலர் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக பொய் தகவலை அளித்து, வருமானவரித் துறையினரை சோதனைசெய்ய வைத்துள்னர். ஆனால், என் வீட்டில் எதுவும் இல்லை என்று சென்றுவிட்டனர்'' என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close