[X] Close

அரக்கோணம்-தக்கோலம் புதிய ரயில் பாதை அமைக்கும் பணி இன்று முதல் 14-ம் தேதி வரை மின்சார ரயில் சேவையில் மாற்றம்


14

  • kamadenu
  • Posted: 10 Apr, 2019 07:47 am
  • அ+ அ-

அரக்கோணம்-தக்கோலம் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் பணி காரணமாக, இன்று (10-ம் தேதி) முதல் வரும் 14-ம் தேதி வரை புறநகர் மின்சார ரயில் சேவையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, சென்னை-அரக்கோணம் இரவு 10.10, இரவு 7.30, 10.45, வேளச்சேரி-திருத்தணி மாலை 5.35, திருத்தணி-அரக்கோணம் இரவு 9.05, சென்னை -திருத்தணி அதிகாலை 4, 11.45, சென்னை -திருப்பதி, சென்னை -சூளூர்பேட்டை காலை 7.45, சென்னை கடற்கரை-அரக்கோணம் காலை 10.30, மறுமார்க்கமாத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில் மதியம் 1.30, அரக்கோணம்-சென்னை மாலை 4.50, சென்னை -திருப்பதி இரவு 7.10, காலை 9.50, திருப்பதி-சென்னை மதியம் 1.30, சென்னை-திருவள்ளூர் இரவு 11.10 ஆகிய ரயில்கள் இன்று (10-ம் தேதி) முதல் வரும் 14-ம் தேதி வரை முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரை-அரக்கோணம் நள்ளிரவு 1.20, அதிகாலை 4.20, சென்னை -அரக்கோணம் அதிகாலை 5.30, காலை 6.45, காலை 8.20, 11.05, காலை 9.10, 12.50, 1.40, பிற்பகல் 3.50, மாலை 4, 4.45, 5.15, 5.45, 6.05, 6.40, இரவு 7.30, 7.45, 8, இரவு 9.15, 10.10, ஆவடி-திருத்தணி காலை 6.25, சென்னை -திருத்தணி காலை 7.05, காலை 10, இரவு 7, இரவு 8.15, மதியம் 2.20, பிற்பகல் 3.30, மாலை 5.40 வேளச்சேரி-திருத்தணி (43941) காலை 11.20, ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள் திருவாலங்காடு வரை மட்டுமே இயக்கப்படும்.

அரக்கோணம்-சென்னை அதிகாலை 3.58, 4.53, காலை 6.53, 7.35, 8.30, 9.10, நண்பகல் 12.15, 2.05,3.53, மாலை 4.50, 6.13, இரவு 7.08, 7.55, 8.38, 9.23, 10.05, அரக்கோணம்-வேளச்சேரி அதிகாலை 4.13, காலை 7.58, திருத்தணி-சென்னை காலை 6.15, அரக்கோணம்-சென்னை கடற்கரை காலை 6.36, திருத்தணி-சென்னை காலை 7.03, திருத்தணி-சென்னை காலை 10.15, மதியம் 1.15, 2.30, மாலை 4.18, மாலை 5.03, மாலை 6.38, இரவு 8.58 ஆகிய ரயில்கள் இன்று முதல் வரும் 14-ம் தேதி வரை திருவாலங்காட்டில் இருந்து இயக்கப்படும்.

விரைவு ரயில்கள்

சென்னை -கோவை இன்டர்சிட்டி விரைவு ரயில் (12679), சென்னை -கேஎஸ்ஆர் பெங்களூரூ லால்பாக் விரைவு ரயில் இன்று (10-ம் தேதி) சென்னை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படுவதற்குப் பதிலாக காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். சென்னை-மங்களூர் வெஸ்ட்கோஸ்ட் விரைவு ரயில் (22637) இன்று மதியம் 12.05 மணிக்கு புறப்படுவதற்குப் பதிலாக 75 நிமிடங்கள் காலதாமதமாக மதியம் 1.20 மணிக்குப் புறப்படும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close