[X] Close

இணையத்தில் வைரலாகும் சீனக் கலைஞரின் சங்கராபரணம் பாடல்


sankaraparanam-song-by-chinese-vocalist

  • kamadenu
  • Posted: 08 May, 2018 13:24 pm
  • அ+ அ-

மலேசியாவில் பிறந்த சீனர் ஒருவர் சங்கராபரணம் பாடலை மேடையில் பாடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சோங் சிவு சென் என்ற அந்த இளைஞர் மலேசியாவில் வீணை காயத்ரியின் இசை நிகழ்ச்சியைக் கேட்ட நாள் முதல் கர்நாடகா சங்கீதத்தின் மீது ஆர்வம் கொண்டிருக்கிறார். காயத்ரியைத் தொடர்பு கொண்டு தனது கர்நாடக சங்கீத வேட்கையைத் தெரிவித்திருக்கிறார். அதற்கு நீங்கள் சென்னை வரவேண்டும் என காயத்ரி சொல்ல அப்படியே செய்திருக்கிறார்.

இங்கு வந்ததும் பரதம், பாடல் எனப் பல்வேறு கலைகளையும் பயின்றிருக்கிறார் சோங் சிவு. ஆனால், இவருக்கு இன்னொரு பெயரும் இருக்கிறது. சாய் மதன மோகன குமார். இப்பெயரை இவருக்கு வழங்கியவர் டி.கே.பட்டம்மாள் எனத் தெரிகிறது.

சென்னின் குரலில் சங்கராபரணம் பாடல் இதோ உங்களுக்காக..
 

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close