[X] Close

பிச்சைப் பாத்திரம் எடுத்து கெஞ்சும் நிலை கூடாது: நடிகர் கமல்ஹாசன் ஆதங்கம்


  • kamadenu
  • Posted: 09 Apr, 2019 10:39 am
  • அ+ அ-

பிச்சைப் பாத்திரம் எடுத்துக்கொண்டு கெஞ்சும் நிலையில் இருக்கக்கூடாது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

கோவை மக்களவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் சி.மகேந்திரனை ஆதரித்து, தொகுதிக்கு உட்பட்ட திருப்பூர் மாவட்டம் பல்லடம் என்.ஜி.ஆர் சாலையில் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் நேற்று பேசியதாவது:

மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்துள்ளோம். தமிழகத்தின் குரல் டெல்லியில் ஓங்கி ஒலிக்க, மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு ஆதரவு தர வேண்டும். பிரதமர் யார் என முடிவு செய்யும் தேர்தல் என்றாலும், நம் குரல் அங்கு ஒலிக்க வேண்டும். பிச்சைப் பாத்திரம் எடுத்துக்கொண்டு, கெஞ்சும் நிலையில் நாம் இருக்கக்கூடாது. இங்கிருந்து தைரியமான, படித்த, தமிழகத்துக்காக குரல் கொடுக்க நல்ல கூட்டம் அங்கே செல்ல வேண்டும். அதற்கான ஏற்பாடுதான் மக்கள் நீதி மய்யம். சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை விரிவாக்கத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது செல்லாது என தீர்ப்பு வந்துள்ளது. வியாபாரிகள் சம்பாதிக்க நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைக்காதீர்.

எங்களுக்கு சாலை வேண்டும்; ஆனால் நடக்கும் பாதையில் போடுங்கள். விவசாய நிலத்தை ஒப்பந்ததாரரிடம் கொடுப்பதற்காக திட்டங்கள் வேண்டாம். இரண்டு கழகத்தினரையும், அமைச்சர்களையும் திட்டினால் கைதட்டல் கிடைக்கும். ஆனால், அதைவிட முக்கியம் மக்களுக்காக வேலை செய்வது. மக்கள் பாதுகாப்புக்கான ஆட்சிக்கு, மக்கள் நீதி மய்யத்துக்கு ஆதரவு அளியுங்கள். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close