[X] Close

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு சரக்கு வாகனங்களில் அழைத்து வரப்படும் பொதுமக்கள்: போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


  • kamadenu
  • Posted: 09 Apr, 2019 10:37 am
  • அ+ அ-

உடுமலையில் தலைவர்களின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க பொதுமக்களை போக்குவரத்து விதிகளை மீறி சரக்கு வாகனங்களில் அழைத்து வந்தது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக உடுமலையில் கடந்த சில நாட்களாக மாநில தலைவர்கள் வருகையால் பிரச்சார களம் சூடு பிடித்துள்ளது. முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், டிடிவி தினகரன், கமல்ஹாசன், சரத்குமார், வாகை சந்திரசேகர், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது ஆதரவு வேட்பாளருக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திரளான மக்களின் பங்கேற்பை காட்டுவதற்காக வேட்பாளர்கள் சார்பில் சரக்கு வாகனங்களில் போக்குவரத்து விதிகளை மீறி பொதுமக்கள் அழைத்து வரப்படுவது அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கூறும்போது, ‘சரக்கு லாரிகளில் கூட குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் ஆடு, மாடுகளைக் கூட அழைத்துச் செல்ல வேண்டும் என்ற விதி உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக கிராமங்களில் ஆட்கள் திரட்டும் பணி நடைபெற்று வருகிறது. வயல் வேலைகளுக்கு அழைத்துச் செல்லப்படுவதை போல நகரத்தை நோக்கி போக்குவரத்து மிகுந்த சாலைகளில் நூற்றுக்கணக்கான வாகனங்களில் கூலி தொழிலாளர்கள் அழைத்துவரப்படுகின்றனர். இது மனித உரிமை மீறிய செயல் மட்டுமின்றி போக்குவரத்து விதி மீறல் ஆகும். இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்’ என்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close