[X] Close

பசுமை வழிச்சாலைக்கு எதிரான தீர்ப்பு: சேலம், தி.மலையில் மக்கள் மகிழ்ச்சி; திட்டத்தை ரத்து செய்ய அரசுக்கு கோரிக்கை


  • kamadenu
  • Posted: 09 Apr, 2019 07:08 am
  • அ+ அ-

பசுமை வழிச்சாலை திட்டத்துக்கான அரசாணை ரத்து செய்யப்பட்டதை அறிந்ததும், சேலம் மற்றும் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சென்னை - சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் 277 கி.மீ. தொலைவுக்கு 8 வழிச்சாலை அமைக்க அரசு திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்நிலையில், இந்த திட்டத்துக்கான அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதையறிந்து, சேலம் அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த ராமலிங்கபுரம் கிராமத்தில் விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பட்டாசுகளை வெடித்து இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விளை நிலத்தில் பசுமை வழிச் சாலைக்காக அளவீடு செய்யப்பட்டு நட்டு வைக்கப்பட்டிருந்த முட்டுகற்களை அகற்றிய பொதுமக்கள், நிலத்தில் கற்பூரம் ஏற்றி, கண்ணீர் மல்க வணங்கினர்.

பசுமை வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்து அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும். இவ்வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது என்று மக்கள் கூறினர். பசுமை வழிச்சாலையை எதிர்த்து சேலத்தில் இருந்து 36 விவசாயிகள் வழக்குத் தொடர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தி.மலையில் வரவேற்பு

277 கிமீ நீள பசுமை வழிச்சாலை திட்டத்தில் தொலைவில் 122 கிமீ தொலைவு சாலை திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைய இருந்தது. இது 45 சதவீதமாகும். இதற்காக, 96 ஊராட்சிகளில் சுமார் 900 ஹெக்டர் விவசாய நிலம், வனப் பகுதி கையகப்படுத்தப்பட இருந்தது. இந்தத் திட்டத்தை விவசாயிகள் கடுமையாக எதிர்த்து வந்தனர்.

இந்நிலையில், உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று, திருவண்ணாமலை, செங்கம், கலசப்பாக்கம், செய்யாறு, வந்தவாசி, போளூர் வட்டங்களில் வசிக்கும் விவசாயிகள், பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். சில இடங்களில் விவசாய நிலங்களில் புதைக்கப்பட்டிருந்த குறியீடு கற்களை விவசாயிகளே அகற்றினர்இதுகுறித்து, பசுமை சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு துணை ஒருங்கிணைப்பாளர் அழகேசன் கூறும்போது, "5 மாவட்டங்களில் அமைக்கப்பட்ட நிலம் கையகப்படுத்துவதற்கான தனி மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தை மூட வேண்டும். நிலம் எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர்களை திரும்பப் பெற வேண்டும்" என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close