[X] Close

‘டெண்டர் ஓட்டு’ முறை மூலம் வாக்களிப்பது எப்படி?


  • kamadenu
  • Posted: 06 Apr, 2019 06:52 am
  • அ+ அ-

ஒருவரது வாக்கு ஏற்கெனவே வேறு ஒருவரால் பதிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில், ‘டெண்டர் ஓட்டு’ முறையில்,வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்.

TENDER VOTE

தேர்தலை பொறுத்தவரை, வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பவர்கள், உரிய அடையாள அட்டையை காட்டி வாக்களிக்கலாம். ஆனால், சில நேரங்களில் உருவ ஒற்றுமையை பயன்படுத்தியோ அல்லது கள்ள ஓட்டு போடும் நோக்கத்திலோ ஒருவரது வாக்கை, மற்றொருவர் செலுத்திவிட வாய்ப்புள்ளது.

அந்த மாதிரியான நேரத்தில், அந்த வாக்காளருக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதுவே, டெண்டர் ஓட்டாகும். தனது வாக்கு ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறும் வாக்காளரின், அடையாள சான்றுகளை வாக்குச்சாவடி நிலை அலுவலர் செய்வார். அவர்தான் உண்மையான வாக்காளரா என்பதை உறுதி செய்து, டெண்டர் ஓட்டுக்கு உரிய வாக்குச்சீட்டு படிவத்தை அளித்து, அவரை வாக்களிக்கச் செய்து, அதற்குரிய உறையில் வைத்து சீலிட்டு உரிய அதிகாரிகளிடம் ஒப்படைப்பார். வாக்கு எண்ணிக்கையின் போது, தேவைப்படும் பட்சத்தில் அந்த வாக்கு எண்ணப்படும்.

CHALLENGED VOTE

டெண்டர் ஓட்டை போல இந்த சேலஞ்ச்டு ஓட்டும் உள்ளது. ஒரு வேளை ஒரு வாக்காளர் தனது வாக்கை செலுத்த வரும்போது, அங்குள்ள வேட்பாளரின் முகவர், வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் இவர் இல்லை என்று தெரிவித்தால், வாக்குச்சாவடி நிலை அலுவலர், சம்பந்தப்பட்ட வாக்காளரின் அடையாள ஆவணங்களை கேட்டு பெற்று ஆய்வு செய்வார். இவ்வாறு வேட்பாளரின் முகவர், எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் அவர் ரூ.2-ஐ வைப்பு நிதியாக செலுத்த வேண்டும். வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஆய்வில், அவர் சரியான வாக்காளர் என்று தெரிந்தால் தொடர்ந்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவார். இல்லாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட வாக்காளர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close