[X] Close

11 நகரங்களில் 100 டிகிரி வெயில் பதிவு


11-100

  • kamadenu
  • Posted: 06 Apr, 2019 06:22 am
  • அ+ அ-

தமிழகத்தில் 11 நகரங்களில் 100 டிகிரி அளவை விட அதிகமாக வெயில் பதிவாகி யுள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல பகுதிகளில் வெயில் சுட்டெரிக்கிறது. 11 நகரங்களில் வெயில் 100 டிகிரி வெப்ப நிலையை தாண்டிவிட்டது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:நேற்று மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெப்ப நிலை அளவின்படி அதிகபட்ச மாக சேலம், திருத்தணி ஆகிய இடங்களில் தலா 104 டிகிரி, மதுரை தெற்கு, மதுரை விமான நிலையம் ஆகிய இடங்களில் தலா 103 டிகிரி, திருச்சி, வேலூர், கரூர் பரமத்தி, தருமபுரி ஆகிய இடங்களில் தலா 102 டிகிரி, நாமக்கல், பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் தலா 101 டிகிரி, கோவையில் 100 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. அடுத்த சில தினங்களுக்கு வெப்பநிலை குறித்த எச்சரிக்கை ஏதும் இல்லை.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close