[X] Close

பிரச்சாரத்தின் போது தேம்பி தேம்பி அழுத அதிமுக வேட்பாளர்: அழாதீங்க என தேற்றிய பெண் குரல்


  • kamadenu
  • Posted: 05 Apr, 2019 12:09 pm
  • அ+ அ-

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார் லோகிராஜன். இவர் நேற்று தேனியின் பல்வேறு பகுதிகளிலும் திறந்த ஜீப்பில் சென்றபடி பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் அவரது தாய் ஊரான மறவட்டியில் வாக்கு சேகரிக்கச் சென்ற போது திடீரென தேம்பி தேம்பி அழத்தொடங்கினார். இதனால், தொண்டர்களும் சுற்றியிருந்தவர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

அப்போது கூட்டத்திலிருந்து ஒரு பெண் "எதுக்கு அழுவாம நல்லா சொல்லுங்க. இங்க பூராம் ரெட்டலைக்குத்தான் ஓட்டுபோடுவாங்க" எனக் கூறுகிறார். அதனைத் தொடர்ந்து சில ஆண்களும் அழக் கூடாது, ஓங்கிப் பேசு, ஓங்கிப் பேசு என கோஷமிட்டனர்.

ஆண்டிப்பட்டி தொகுதி ஏற்கெனவே கவனம் பெற்றிருக்கிறது. எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அதிமுகவின் கோட்டை  இத்தொகுதி. இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் லோகிராஜனின், திமுகவின் வேட்பாளர் மகாராஜன் ஆகியோர் சகோதரர்கள் என்பது இந்த முறை தொகுதியில் சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கிறது.

தேனி சகோதரர்கள் இருவர் திமுக, அதிமுக வேட்பாளர்களாக ஆண்டிபட்டி தொகுதிக்கு அறிவிக்கப்பட்டதை பட்டாசு வெடித்துக் கொண்டாடிய இரு தரப்பினர் மீதும் தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்பாளர் அறிவிப்பு தொடங்கியே இத்தொகுதி இடைத்தேர்தல் மக்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close