[X] Close

ராகுலை விமர்சிக்காத அதிமுகவினர்: அதிருப்தியில் பாஜக தலைவர்கள்


  • kamadenu
  • Posted: 04 Apr, 2019 08:10 am
  • அ+ அ-

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் கட்சியையும், அதன் தலைவர் ராகுல் காந்தியையும் விமர்சிக்காதது பாஜக தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக – காங்கிரஸ் கூட்டணி வேட்பார்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வருங்கால பிரதமர் ராகுல் காந்தி என புகழ்வதோடு, பிரதமர் மோடியை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். ஆனால், பிரச்சாரத்தின்போது திமுகவையும், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சிக்கும் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர், காங்கிரஸ் கட்சியையோ, திமுகவால் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராகுல் காந்தியையோ விமர்சித்து எதுவும் பேசுவதில்லை. ராகுல் காந்தி என்ற பெயரைக்கூட அதிமுகவினர் உச்சரிப்பதில்லை.

அதிமுகதான் இப்படி என்றால் கூட்டணி கட்சிகளான பாமக, தேமுதிக, தமாகா போன்ற கட்சிகளும் ராகுல் காந்தியை விமர்சிப்பதில்லை. தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மட்டுமே பிரதமர் மோடியை பாராட்டிப் பேசி வருகிறார். இந்த மக்களவைத் தேர்தலில் மோடியா, ராகுலா என போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் ராகுல் காந்தியை விமர்சிக்காமல் அதிமுக தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருவது பாஜக தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close