[X] Close

ஆலோசனைக் கூட்டத்தில் தகராறு: தேமுதிக நகரச் செயலாளர் கைது


  • kamadenu
  • Posted: 04 Apr, 2019 08:08 am
  • அ+ அ-

நாகப்பட்டினம் நாகை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்ற தேமுதிக ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்பட்ட தகராறில், கேப்டன் மன்றச் செயலாளரைத் தாக்கிய நகரச் செயலாளர் கைது செய்யப்பட்டார்.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சீர்காழி மற்றும் நாகையில் பிரச்சாரம் செய்ய உள்ளதை முன்னிட்டு, சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு வந்த நகரச் செயலாளர் செந்தில்(40), கேப்டன் மன்ற மாவட்டச் செயலாளர் சேகரிடம், 'கட்சி தொடர்பான எந்த தகவல்களையும் எனக்கு நீங்கள் சொல்வதில்லை. பிரச்சாரத்துக்கு ஆட்களை அழைத்து வந்தால் அவர்களுக்கும் எதுவும் செய்வதில்லை' என்று கூறினார். இதனால் அவர்களுக்குள் வாய்த் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில், சேகரைத் தாக்கினார். இதனால் 2 பேரின் ஆதரவாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அங்கு கூச்சல் குழப்பம் நிலவியது. இதுகுறித்து, சேகர் அளித்த புகாரின்பேரில் சீர்காழி போலீஸார் வழக்கு பதிவு செய்து செந்திலை நேற்று கைது செய்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close