கோவை சேரன் பகுதியில் கழிவுநீர் கலந்த தண்ணீர் விநியோகிக்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி


கோவை சேரன்மாநகர் பகுதியில் இன்று விநியோகிக்கப்பட்ட குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலந்து வந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கோவை: கோவை சேரன் மாநகர் பகுதியில் இன்று விநியோகிக்கப்பட்ட குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலந்து வந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கோவை விளாங்குறிச்சி சாலையில் அமைந்துள்ளது சேரன் மாநகர் அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் குடியிருப்பு பகுதி. இங்கு ஏ,பி,சி என மூன்று பிரிவுகளின் கீழ் மொத்தம் 568 குடியிருப்புகள் உள்ளன. மாநகராட்சி 22-வது வார்டுக்குட்பட்ட இப்பகுதியில் ஏற்கெனவே சீரான முறையில் குடிநீர் விநியோகிக்கப்படுவதில்லை. இந்நிலையில் இன்று விநியோகிக்கப்பட்ட குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலந்து வந்துள்ளது. இதனால் கடும் துர் நாற்றம் வீசியதுடன் கழிவுகளும் உள்ளே மிதப்பதை கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சீரான முறையில், பாதுகாப்பான குடிநீர் வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்க எடுக்க வேண்டும். சாக்கடை கால்வாய் குறிப்பிட்ட கால இடைவெளியில் தூர்வாரப்பட வேண்டும். தூய்மை பணிகள் சரிவர மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.