[X] Close

தேர்தல் அன்று விடுமுறை அளிக்காவிட்டால் நடவடிக்கை


  • kamadenu
  • Posted: 02 Apr, 2019 06:50 am
  • அ+ அ-

சென்னை மாவட்டத் தேர்தல்அலுவலரும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருமான ஜி.பிரகாஷ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மக்களவை பொதுத்தேர்தலில் வாக்களிப்பை 100 சதவீதம் உறுதி செய்யும் வகையில் வாக்குப்பதிவு நடைபெறும் நாளான ஏப்ரல் 18-ம் தேதி(வியாழக்கிழமை) அன்று அரசு நிறுவனங்கள், பொதுத்துறைநிறுவனங்கள், அரசு பள்ளிகள்,தனியார் பள்ளிகள், கல்லூரிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அனைத்து தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு பொதுவிடுமுறை நாளாக அறிவித்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய 3 மக்களவைத் தொகுதிகள் மற்றும் பெரம்பூர் சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற உள்ளது. எனவே, வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று அனைத்துநிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

ஒருசில தனியார் பள்ளிகள் அன்றைய தினம் இயங்க உள்ளதாக பெற்றோர்களிடமிருந்து புகார்கள் பெறப்பட்டுள்ளன. அவ்வாறு இயங்கும் பள்ளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close