வேதாந்தாவிற்கு தமிழக அரசு அனுமதியா?:சந்தேகத்தைக் கிளப்பும் டிடிவி!


வேதாந்தா குழுமத்திற்கு விழுப்புரம், நாகப்பட்டினம் மாவட்டங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் வருவதாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " தமிழகத்தில் விழுப்புரம், நாகப்பட்டினம் மாவட்டங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க வேதாந்தா குழுமம் நிறுவனம் தமிழக அரசிடம் அனுமதி கோரியிருப்பதாக செய்திகள் வருகின்றன.

அது உண்மையெனில், அத்தகைய அனுமதி எதையும் தமிழக அரசு வழங்கிடக்கூடாது. மேலும், இது தொடர்பான விவரங்களை மக்களுக்கு தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

x