குமரி மாவட்ட மதிமுக இலக்கிய அணி நிர்வாகிகள் நியமனம்


வைகோ , துரை வைகோ

சென்னை: மதிமுகவில் கன்னியாகுமரி மாவட்ட இலக்கிய அணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அனைத்து நிலைகளிலும் கட்சியை வலிமைப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மதிமுகவில் உட்கட்சித் தேர்தல் முடிவுற்று, சார்பு அணிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் அனைத்து நிலைகளிலும் கட்சியை வலிமைப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் குமரி மாவட்டத்தின் இலக்கிய அணி நிர்வாகிகள் தொடர்பான அறிவிப்பை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ளார்.

அதன்படி, மதிமுக கன்னியாகுமரி மாவட்ட இலக்கிய அணித் தலைவராக எஸ்.ஏ.ஆர்.மணி, செயலாளராக வே.செல்வகுமார், பொருளாளராக நாஞ்சில் குற்றாலம், துணைச் செயலாளர்களாக டி.வில்சன், எஸ்.எம்.டார்வின், கே.முத்துப்பட்டன் பிள்ளை ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.